நாங்கள் இங்கு வந்தபோது, மசூதியின் மாடத்தில் மூவர்ணக் கொடியும் காவிநிறக் கொடியும் இருப்பதைக் கண்டோம்

இதே மசூதியில் தான் செவ்வாய்க்கிழமையன்று கூட்டமாக வந்த சிலர் தாக்குதல் நடத்திவிட்டு, இங்குள்ள மாடத்தின் மீது மூவர்ணக் கொடியையும், காவிக் கொடியையும் ஏற்றியதாக கூறப்பட்டது.


அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அதன்பிறகு வெளியிடப்பட்ட டெல்லி காவல்துறையின் அறிக்கையில், அசோக் நகரில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.


நாங்கள் இங்கு வந்தபோது, மசூதியின் மாடத்தில் மூவர்ணக் கொடியும் காவிநிறக் கொடியும் இருப்பதைக் கண்டோம்.


செவ்வாய்க்கிழமையன்று இப்பகுதிக்குள் நுழைந்த கும்பல் இதுபோன்ற வெறிச்செயல்களைச் செய்ததாக மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மக்கள் தெரிவித்தனர்