புலியிடம் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டசாலி! வைரலாகும் வீடியோ

Mumbai: 


புலியிடம் சிக்கிக் கொண்ட ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறாது. 


செல்போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவின் தொடக்கத்தில் சேஷக்காக தெரிகிறது. பின்னர் சில விநாடிகளில் புலியிடம் சிக்கிய அந்த நபரை நோக்கி தெளிவாக தெரியும் போது தான் அச்சுறுத்தும் அந்த காட்சியின் வீரியம் நமக்கு தெரிய வருகிறது. அதில், வயலின் நடுவே, ஒருவர் அருகில் புலி அமர்ந்திருக்கிறது. புலிக்கு முன்பு இருக்கும் அந்த நபர் எந்த அசைவுமின்றி சடலம் போல் படுத்திருக்கிறார். 


மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களில், முதலில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு கூட்டமாக புலியை துரத்துகின்றனர். அப்போது, சாலையை கடந்து செல்லும் புலியிடம் ஒருவர் வசமாக சிக்கிக்கொள்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் காண்கின்றனர். 


அந்த நபர் முன்பு புலி அமர்ந்த போதிலும், அவர் எந்த அசைவுமின்றி சடலம் போல் படுத்திருக்கிறார். இதையடுத்து, இதயமே நிற்கும் அளவு பதற்றமாக சில விநாடிகள் செல்ல, சுற்றியிருந்த கிராமவாசிகள் கற்களை எறிந்து கூச்சலிட்டதால், அந்த புலி சிக்கிய நபரை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு ஓடுகிறது. பின்னர் சிக்கிய அந்த நபர் எழுந்து சாதாரணமாக செல்கிறார். 


 

இதுதொடர்பான பரபரக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்