சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற நவம்பர் மாதத்தைப் போல இல்லாமல் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறைக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 4, 5 ஆகிய இரண்டு நாட்களைத் தவிர இதர நாட்களில் தங்கம் விலை குறைக்கப்பட்டிருந்தது. இன்றைய தினத்திலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (டிசம்பர் 9) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 4 ரூபாய் குறைந்து 3,614 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,618 ஆக இருந்தது.
அதேபோல, நேற்று 28,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,912 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.