Chennai Rains: அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை உண்டு... வறண்ட வானிலை காணப்படும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல எச்சரிக்கை ஏதும் இல்லை. அதுபோல கடந்த 24 மணிநேரத்தில் குறிப்பிடத்தக்க மழை தமிழகத்தில் பெய்யவில்லை.


அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் பெரிய அளவில் வானிலை மாற்றம் எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது, “சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க வாய்ப்பு உண்டு.